ஆக்ரா,:புதுடில்லி அருகே, தொழிற்சாலையில் இயந்திரம் வெடித்துச் சிதறி, இருவர் உயிரிழந்தனர். காயம் அடைந்த ஒருவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
புதுடில்லி அருகே, உ.பி., மாநிலம் ஆக்ராவில், நெரிசல் மிகுந்த நமக் கி மண்டியில் உள்ள சரபாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில், நேற்று முன் தினம் இரவு 7:45 மணிக்கு திடீரென இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இரு தொழிலாளர்கள் உடல் சிதறி அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்ட ஒருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement