ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக புதிதாக மூன்று இன்-ஃப்ளைட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் இனி பிளைட்டில் செல்லும்போது கூட தங்குதடையில்லாமல் அழைப்புகள் மற்றும் ஏர்டெல் டேட்டாவை யூஸ் பண்ணலாம். ப்ரீப்பெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் என இரு பார்மேட்டுகளிலும் இந்த மூன்று திட்டங்களும் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஏர்டெல் ரூ 195 பிளான்
ஏர்டெல் நிறுவனம் இன்-ஃப்ளைட் திட்டத்தில் 195 ரூபாய் பிளானில், 250 எம்பி டேட்டா, 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் கால்ஸ் (Outgoing Calls) மற்றும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ் (Outgoing SMS) போன்ற நன்மைகளை 24 மணி நேரம் வேலிடிட்டியில் ரீச்சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஏர்டெல் ரூ.295 பிளான்
இந்த இன்பிளைட் பிளானில் அதே அவுட்கோயிங் கால்ஸ் மற்றும் அவுட்கோயிங் எஸ்எம்எஸ் நன்மைகளை 24 மணிநேரம் வேலிடிட்டியில் கொடுக்கும் ஏர்டெல், கூடுதலாக 250 எம்பி டேட்டாவை கொடுக்கிறது. அதாவது மொத்தம் 500 எம்பி டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.595 பிளான்
இதேபோல் 595 ரூபாய் பிளானிலும் மேலே குறிப்பிடப்பட்ட இரு பிளான்களில் இருக்கும் அம்சமே கிடைக்கும் என்றாலும் யூசர்கள் டேட்டாவை மட்டும் கூடுதலாக உபயோகித்துக் கொள்ளலாம். அதாவது 1ஜிபி டேட்டாவுடன் 100 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை 24 மணி நேர வேலிடிட்டியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஏர்டெல் நிறுவனத்தில் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீப்பெய்ட் என எந்த சிம் கார்டு வாடிக்கையாளர்களாக இருந்தாலும் இந்த பிளைட் இன் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.