சென்னை: டைரக்டர் ராஜகுமாரனை நடிகை தேவயானி கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. விஜய், அஜித், கமல்ஹாசன், விஜயகாந்த், பார்த்திபன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். சீயான் விக்ரமுடன் அவர் நடித்த விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தை ராஜகுமாரன் இயக்கி இருந்தார்.
