சென்னை: நடிகர் கமல்ஹாசன் பன்முகத்திறமைகளுடன் கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளவர். முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் இணைந்து நடித்திருந்த விக்ரம் படம் அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்திருந்த நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இணைந்து இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
