சென்னை நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம். ”தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன. இனி மாவட்டங்களில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர் தங்கள் பணியைத் தொடங்கிவிடுவார்கள். தேர்தல் செலவினம் தொடர்பான குழுக்களின் கண்காணிப்பு தொடங்கியுள்ளது. இனி தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை நிறைவேற்றுவோம். சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரை, விளங்கோடு தொகுதிக்கு மட்டுமே ஏப்ரல் 19 ஆம் […]
