டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 ஆம் முறையாகச் சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி மாநிலத்தில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி அமலாக்கத்துறை டில்லி முன்னாள் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோரை கைது செய்தது. டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் 8 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால், […]
