Right to Arunachal Pradesh: Centers response to China | அருணாசல பிரதேசத்துக்கு உரிமை : சீனாவுக்கு மத்திய அரசு பதிலடி

புதுடில்லி : அருணாசல பிரதேசத்தை தன் பகுதியாக சீனா உரிமை கோருவதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அது முன்பும், இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதி தான், என வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்துக்கு சீனா உரிமை கோரி வருகிறது.

தன் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தின் தென் பகுதிக்கு உட்பட்டது என்று சீனா கூறி வருகிறது. இதற்கு மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அருணாசல பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டார். இதற்கு சீன வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு நம் வெளியுறவுத் துறை பதில் கொடுத்தது.இதற்கிடையே சீன ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், அருணாசல பிரதேசத்துக்கு இந்தியா உரிமை கோருவதை ஏற்க முடியாது என, கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து, வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ள
தாவது:அருணாசல பிரதேசம் முன்பும், இப்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதிதான்.
அதில் எந்த மாற்றமும் இல்லை. சீனா எதிர்ப்பு தெரிவிப்பதால், நிலைமை மாறாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.