திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் தாரகை கத்பர்ட் போட்டியிடவுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் 9 தொகுதிகளில் போட்டியிட உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதுவரை அறிவிக்கப்பட்ட 8 வேட்பாளர்களில் திருவள்ளூரில் போட்டியிடும் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் […]
