சதாரா பாரதி தமிழ்ப்பட நாயகன் சாயாஜி ஷிண்டே கடும் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாயாஜி ஷிண்டே மராத்தி பட உலகில் பிரபலமான நடிகராக இருந்து வருவதுடன் தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிப் படத்தில் நடித்து உள்ளார். குறிப்பாகத் தமிழில் ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘அழகி’, ‘பாபா’, ‘வேலாயுதம்’, ‘அழகிய தமிழ் மகன்’, ‘வேட்டைக்காரன்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமான சாயாஜி ஷிண்டே. வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். முதலில் ஐஏஎஸ் அதிகாரி ஞான ராஜசேகரன் இயக்கிய ‘பாரதி’ திரைப்படத்தில் சுப்பிரமணிய பாரதி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் […]
