நடிகர்கள் பலரும் தங்களது பெயரை திரைப்படங்களுக்கென மாற்றிக் கொள்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் அக்ஷய் குமார், திரையுகிற்கு வருவதற்கு முன் தனக்கு வைக்கப்பட்டிருந்த ‘ராஜிவ் ஹரி ஓம் பாட்டியா’ என்ற மாற்றி அக்ஷய் குமார் என வைத்துக் கொண்டவர். ராஜிவின் (அக்ஷய் குமார்) தந்தை ஒரு இராணுவ அதிகாரி. தனது அப்பாவைப் பார்த்து இராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆர்வம் கொண்ட அக்ஷய் குமார், சிறுவயதிலிருந்தே கராத்தே, குத்துச் சண்டை போன்றவற்றை வெளிநாடுகளுக்குச் சென்று ஆர்வத்துடன் கற்றுக் கொண்டார். பிறகு, கனடாவில் குடிமைப் பெற்று அங்கு கொஞ்ச காலம் வசித்து வந்தார். சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இவர், மீண்டும் இந்தியா வந்து நடிகராகும் கனவுடன் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கத் தெடங்கினார்.

முதன் முதலில் ‘Aaj’ என்ற இந்தி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். கராத்தே கற்றிருந்த அவருக்கு கராத்தே மாஸ்டராவே நடிக்க வாய்ப்பு கிடைத்திருந்தது. இதையடுத்து கதாநாயகனாக ‘Saugandh (1991)’ எனும் படத்தில் அறிமுகமாகி 100 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துத் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டு பாலிவுட்டில் வலம் வந்துகொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘Bade Miyan Chote Miyan’, ‘Sarfira’ திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அக்ஷய் குமார், தனது ‘ராஜிவ் ஹரி ஓம் பாட்டியா’ என்ற பெயரை ‘அக்ஷய் குமார் ஹரி ஓம் பாட்டியா’ என மாற்றிக் கொண்டதற்கானக் காரணம் குறித்து பேசியிருக்கிறார். இதுகுறித்து பேசியவர், “நான் நடித்த முதற்படம் ‘Aaj’. அதில் எனது கதாபாத்திரத்தின் பெயர் ‘அக்ஷய் குமார்’. அப்பெயரைக் கொண்டே நான் திரையுலகில் கால்பதித்தேன்.
.jpg)
அப்பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ‘அக்ஷய் குமார்’ எனும் பெயரையே நான் வைத்துக் கொண்டேன் அவ்வளவுதான். இதற்குப் பின்னால் வேறெந்த ஆன்மிக காரணங்களுமில்லை. என் அப்பா மற்றும் வீட்டில், ‘ஏன் பெயரை மாற்றினாய்?’ எனக் கேட்டார்கள். அவர்களுக்கும் நான் இதே பதிலைத்தான் கூறினேன்” என்று கூறியிருக்கிறார்.