Ind vs Eng ODI Series: ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கமா? 2வது போட்டியில் நடக்கப்போகும் மாற்றம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேனான முதல் ஒருநாள் போட்டி நேற்று (பிப்.06) நடந்து முடிந்தது. இங்கிலாந்து அணி 248 ரன்களே அடித்த நிலையில், இந்திய அணி அதனை 38.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் எட்டி வெற்றி பெற்றது. 

சும்பன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோ அரை சதங்களை விளாசினர். குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 59 ரன்களை விளாசி அதிரடி காட்டினார்.  இப்போட்டியில் காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக விராட் கோலி விளையாடவில்லை. 

2வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட வாய்ப்பு

தற்போது வீக்கம் சரியாகி விட்டதால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் விராட் கோலி விளையாடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில், விராட் கோலி விளையாடும் பட்சத்தில் அவருக்கு பதிலாக யாரை அணியில் இருந்து நீக்க போகின்றனர் என்பதில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபில் பும்ரா விளையாடுவாரா? வெளியான தகவல்!

நேற்று (பிப்.06) நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக யஷ்யஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் போட்டியின் முடிவுக்கு பின்னர் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், தான் முதலில் பிளேயிங் 11ல் சேர்க்கப்படாததாகவும் பின்பு காயம் காரணமாக விராட் கோலி விளையாட மாட்டார் எனத் தெரிந்தவுடன் தன்னை பிளேயிங் 11ல் சேர்த்ததாகவும் கூறி இருந்தார். 

ஸ்ரேயாஸ் ஐயர் சமீப ஒருநாள் போட்டிகளில் 4வது இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த 2023 ஒருநாள் போட்டியில் கூட அவரது பங்களிப்பு இந்திய அணி மிக சிறந்ததாக இருந்தது. ஒருநாள் போட்டிகளில் 4வது இடத்தில் மட்டும் அவர் 1000க்கும் அதிகமான ரன்களை 100க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 50க்கும் மேற்பட்ட சராசரியுடன் எட்டி இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். 

அடுத்தடுத்த போட்டிகளில் உறுதி ஆகும்

இந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்குவது சரியாக இருக்குமா? என்ற கேள்விகள் எழும்பி உள்ளன. அதேபோல் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக ஆட வைத்து பயிற்சி அளிக்கதான் என்ற எண்ணத்தில் தான் ஸ்ரேயாஸ் ஐயரை நீக்க உள்ளதாக மற்றொரு தகவலும் சொல்லப்படுகிறது. 

சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரராக இறங்குவார்கள் என்றும் ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி அடுத்தடுத்து இறங்குவார்கள் என்றும் கூறப்பட்டது. ஒருவேளை ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறங்கினால் சுப்மன் கில் 4வது இடத்தில் இறங்குவார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இப்படியான பல குழப்பங்களுக்கு வர இருக்கும் 2 மற்றும் 3வது ஒருநாள் போட்டிகளில் பதில்கள் தெரிந்துவிடும்.

மேலும் படிங்க: ஆர்சிபிக்கு அடுத்த ஆப்பு… விலகும் முக்கிய வீரர்? இந்த வருஷமும் கப் அடிக்க முடியாதா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.