திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்தவர் அழகுராஜா(32). இவருடைய மனைவி ராமலட்சுமி (25). இவருக்கு ஜோசியம் மீது தீவிர நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் அடிக்கடி ஜோசியம் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு ஜோசியர், “கணவருக்கு ஆயுள் பிரச்னை உள்ளது. அதைச் சரி செய்ய வேண்டும் என்றால் ஒரு சிறுமியுடன் சேர்ந்து இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதை நம்பிய ராமலட்சுமி, கணவரிடம் கூறி சிறுமிகளைத் தேடி அலைந்துள்ளனர். கடந்த 2021-ல் பெரியகுளத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 ஆம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுமியை டூவிலரில் கடத்திச் சென்றுள்ளனர். பழைய வத்தலகுண்டு மலை அடிவாரத்தில் உள்ள வீட்டில் வைத்து அந்த சிறுமியைக் கணவருடன் சேர்ந்து இருக்க ஏற்பாடு செய்துவிட்டு கதவைப் பூட்டியுள்ளார். சிறுமி அழகுராஜாவால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
சிறுமியைக் காணவில்லை எனப் பெற்றோர் அளித்த புகாரில் போலீஸார் தேடினர். இதனால் எங்குக் கடத்தினார்களோ அதே பகுதியில் டூவிலரில் அழைத்துச் சென்று சிறுமியை இறக்கிவிட்டு வந்துள்ளார் அழகுராஜா.

இவ்வழக்கை விசாரித்த போலீஸார், அழகுராஜா, ராமலட்சுமியைக் கைது செய்தனர். இவ்வழக்கு தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அழகுராஜா, ராமலட்சுமிக்குத் தலா 20 ஆண்டுகள் சிறை, 19 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கணேசன் தீர்ப்பளித்துள்ளார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel