சீமான் வீட்டு வாசலில் நேற்று ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆய்வாளரை உள்ளே அனுமதிக்க மறுத்ததோடு அவருடன் வாக்குவாதம் செய்து மல்லுக்கு நின்ற காவலாளி அமல்ராஜை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். காவல்துறையினர் என்று தெரிந்தும் அவர்களை உள்ளே நுழையவிடாமல் மரியாதைக் குறைவாக நடத்தியதோடு இடுப்பில் துப்பாக்கி வைத்துக் கொண்டு திமிறிய அந்த காவலாளியை காவல்துறையினர் சுற்றிவளைத்து குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றனர். இந்த நிலையில், தனது வீட்டுக்கு காவல்துறையினர் சம்மன் கொடுக்க வருவது […]
