Virat Kohli records | இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறார். பல புதிய மைல்கல்களை எட்டியிருக்கும் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இன்னொரு மகத்தான சாதனை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சாதனையை அவர் செய்தால் உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையும் விராட் கோலி வசம் வரும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மார்ச் 2ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த சாதனையை விராட் கோலி அந்த போட்டியில் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டி
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மார்ச் 2 ஆம் தேதி தனது கடைசி குரூப் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
விராட்கோலி சதம்
விராட் கோலியை பொறுத்தவரை பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சாம்பியன்ஸ் டிராபியில் இது அவரது முதல் சதம். மார்ச் 2 ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நியூசிலாந்திற்கு எதிராக நடக்கும் போட்டியிலும் அதே ஃபார்மில் விராட்கோலி விளையாடுவார். அப்படியொரு இன்னொரு நல்ல இன்னிங்ஸை விளையாடினால், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் சில சாதனைகளை விராட் கோலி முறியடிக்க முடியும்.
முதல் பேட்ஸ்மேன் விராட்
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் கோலி இதுவரை 6 முறை 50+ ரன்கள் எடுத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அவர் அரைசதம் அடிக்க முடிந்தால், சாம்பியன்ஸ் டிராபியில் 7 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெறுவார். இதுவரை சாம்பியன்ஸ் டிராபியில் யாரும் 6 முறைக்கு மேல் 50+ ரன்கள் யாரும் எடுத்ததில்லை. இதுவரை நடந்த ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் டிராபியில் மட்டும் விராட் கோலி இதுவரை 5 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக அரைசதம் அடித்ததன் மூலம், சாம்பியன்ஸ் டிராபியில் அதிக முறை 50+ ஸ்கோர்கள் அடித்த ஷிகர் தவான், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோரின் சாதனையை அவர் சமன் செய்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அதிக முறை 50+ ரன்கள் எடுத்த வீரர்கள்
ஷிகர் தவான் – 6 (3 சதங்கள், 3 அரை சதங்கள்)
சவுரவ் கங்குலி – 6 (3 சதங்கள், 3 அரை சதங்கள்)
ராகுல் டிராவிட் – 6 (0 சதங்கள், 3 அரை சதங்கள்)
விராட் கோலி – 6 6 (1 சதம், 5 அரை சதங்கள்)
ஜோ ரூட் – 5 (2 சதங்கள், 3 அரை சதங்கள்)
மேலும் படிங்க: IPL 2025: இந்த ஆண்டு சேப்பாக்கம் இல்லை! மைதானத்தை மாற்றிய சிஎஸ்கே!
மேலும் படிங்க: IND vs NZ: இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தியை இல்லாவிட்டால் பெரிய பிரச்னை – என்ன காரணம்?