இன்ஸ்டாகிராம் (Instagram) தற்போது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு எடிட்ஸ் (Edits) செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது டிக்டோக்கின் கேப்கட்டை போலவே ஒரு எடிட்டிங் செயலி ஆகும். இதன் மூலம் இனி மக்கள் தங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திருத்த எந்த மூன்றாம் தரப்பு பயன்பாட்டையும் பயன்படுத்த வேண்டியதில்லை. இனி அவர்கள் Edits உதவியுடன் வீடியோவில் தங்களுக்கு பிடித்தப் படி திருத்தங்களைச் செய்துக்கொள்ள முடியும். இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது முற்றிலும் ஒரு இலவச செயலி ஆகும், மேலும் இது இன்ஸ்டாகிராம் ரீல்களாக மாற்ற பல அம்சங்களை வழங்குகிறது.
இன்ஸ்டாகிராம் எடிட்டிங் ஆப் | Instagram Edits App
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் (Instagram) தளமானது தற்போது, ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்காக எடிட்ஸ் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு பயனர்கள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்தும் (Google Play Store), iOS பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தும் (Apple App Store) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் Mets எடிட்ஸ் அறிமுகத்தை அறிவித்து இருந்தது. அமெரிக்கா டிக்டோக் மற்றும் கேப்கட்டைத் தடை செய்த பிறகு மெட்டா இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவில் கேப்கட் செயல் பயன்படுத்த முடியவில்லை என்றாலும், அமெரிக்க பயனர்களிடையே இந்த செயலி மிகவும் பிரபலமான வீடியோ எடிட்டிங் ஆக இருந்தது. இதனிடையே யூடியூப் சமீபத்தில் படைப்பாளர்களுக்கான புதிய வீடியோ எடிட்டிங் திறன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பயன்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது?
இன்ஸ்டாகிராம் எடிட் செயலியை, பயனர்கள் தங்களின் தொலைபேசியின் கேமராவைப் பயன்படுத்தி காட்சிகளைப் பிடிக்கவும், எந்தவொரு வாட்டர்மார்க்கும் இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த செயலி கிளிப்-லெவல் பிரிசிஜன், ஆட்டோ-என்ஹான்ஸ் டூல் மற்றும் AI இமேஜ் அனிமேஷன் போன்ற அம்சங்களுடன் கட்டுப்பாட்டை வழங்குகிறது. வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளிகள் தங்களுக்கு ஏற்ப எப்படி வீடியோ வேண்டுமோ அப்படி செய்துக் கொள்ளலாம்.
மூன்றாம் தரப்பு வீடியோ எடிட்டிங் பயன்பாடுகளைப் போலன்றி, இது பயனர்கள் மெட்டாவின் பெரிய நூலகத்திலிருந்து இசையை அணுகவும் அனுமதிக்கிறது. த்ரெட்ஸைப் போலவே, எடிட்ஸைப் பயன்படுத்த பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் கணக்கு தேவை. இது இன்ஸ்டாகிராமில் செயல்திறனைக் கண்காணிப்பதையும், திருத்தப்பட்ட உள்ளடக்கத்தை ஒரே கிளிக்கில் பகிர்வதையும் எளிதாக்கும்.