வைபவ் சூர்யவன்சிக்கு வந்த சோதனை.. அடுத்த ஓராண்டுக்கு அணியில் இடமில்லை!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி 35 பந்துகளில் சதம் அடித்து உலகையே திரும்பி பார்க்க வைத்தார். அவரது திறமையை அனைவரும் பாராட்டி வந்தனர். 

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியை ராஜஸ்தான் அணி 1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அப்போது, அனைவரும் ரூ. 1 கோடி கொடுத்து ஒரு சிறுவனுக்கு பயற்சி அளிக்க போகிறதா ராஜஸ்தான் அணி என கிண்டல் அடித்து வந்தனர். ஆனால் கிண்டல் அடித்தவர்களின் வாய்யை தனது பேட்டிங் திறணால் மூடச்செய்தார்.

அதேபோல், சதம் அடித்த பிறகு வைபவ் சூர்யவன்சிக்கு இந்திய அணியில் இடம் அளிக்கப்படும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். சச்சினையும் முந்தி மிக இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் படைப்பார் என தெரிவித்து வருகின்றனர். ஆனால் அடுத்த ஓராண்டுக்கு வைபவ் சூர்யவன்சியால், இந்திய அணியில் இடம்பெற முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2020ஆம் ஆண்டு ஐசிசி சில விதிகளை அமல்படுத்தியது. அதில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 15 வயது என்ற விதி உள்ளது. எனவே தற்போது 14 வயதில் இருக்கும் வைபவ் சூர்யவன்சி கண்டிப்பான ஓராண்டு காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமான இளம் வீரர் என்ற சாதனையை பாகிஸ்தானின் ஹாசன் ராசா வைத்துள்ளார். அவர் அறிமுகமாகும்போது 47 வயது 227 நாட்கள். ஆனால் அப்போது இந்த ஐசிசி விதி அமலில் இல்லை.

அதேபோல் இந்திய அளவில் என எடுத்துக்கொண்டால் சச்சின் 16 வயதி அறிமுகமானார். ஓராண்டுக்கு பிறகு 15 வயதில் சூர்யவன்சிக்கு இந்திய அணியில் சேரும் வாய்ப்பு கிடைத்தால், அவரால் சச்சின் சாதனையை முறியடிக்க முடியும். 

மேலும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டி.. பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸுக்கு வந்த சோதனை!

மேலும் படிங்க: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொத்து இனி இவர் தான் – எம் எஸ் தோனி ஓபன் ஸ்டேட்மென்ட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.