பிரேசிலியா,
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் கோபகபானா கடற்கரையில் பிரபல பாப் பாடகி லேடி காகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கண்டுகளிப்பதற்காக அவரது ரசிகர்கள் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். அப்போது ஆடல், பாடல் என தங்களது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தினர்.
இதற்கிடையே அந்த இசை நிகழ்ச்சிக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதேசமயம் கையில் துப்பாக்கி வைத்திருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Related Tags :