தற்போது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மே மாதத்துடன் இந்த தொடர் முடிவடையுள்ள நிலையில், அடுத்ததாக ஜூன் 20ஆம் தேதி இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளது தேசிய தேர்வுக்குழு. இதுவரை நடைபெற்ற இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் இந்தியா விளையாடியது. ஆனால் இந்த ஆண்டு நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்தியா தகுதி பெற வில்லை. இதற்கு காரணம் நியூசிலாந்து அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் தோல்வியும், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் தோல்வியும் தான்.
மேலும் படிங்க: ஐபிஎல் 2025 உடன் தோனி ஓய்வு உறுதி! இந்த சீசன் விளையாடுவதற்கே இதுதான் காரணம்!
இந்த தொடரில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் கூறப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐந்து போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். ஐந்தாவது போட்டியில் தனக்கு சரியாக பேட்டிங் வரவில்லை என்று விலகினார். ரோகித் சர்மாவிற்கு பிறகு கேப்டன்சி பொறுப்பை யாரிடம் கொடுக்கலாம் என்றும் பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. பும்ராவிடம் கொடுக்கலாம் என்றாலும் அவருக்கு தொடர்ந்து காயங்கள் ஏற்படுவதால் வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு அடுத்தபடியாக கேப்டன்சி ரேசில் சுப்மான் கில் மற்றும் ரிஷப் பந்த் உள்ளனர். இவர்கள் இருவரில் அடுத்த டெஸ்ட் கேப்டனாகும் வாய்ப்பு கில்லுக்கு அதிகம் உள்ளது. இதற்கிடையில் ஒரு மூத்த வீரரும் தனக்கு மீண்டும் டெஸ்ட் கேப்டன் பொறுப்பை கொடுங்கள் என்று கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் பிசிசிஐ மற்றும் தேர்வு குழு ஒரு நீண்ட கால தீர்வை தேடுவதால் மூத்த வீரருக்கு மீண்டும் கேப்டன்சி பொறுப்பை கொடுக்க பிசிசிஐ சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்து தொடரில் இந்திய அணியில் அதிக மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வருவதால் சில வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி அந்த சமயத்தில் யார் பார்மில் இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மே மாத இறுதிக்குள் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.
மேலும் படிங்க: மழையால் வந்த வினை.. தொடரை விட்டு வெளியேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!