KKR vs CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி இன்று (மே 7) கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இன்று வழக்கத்திற்கு மாறாக இந்திய தேசிய கீதத்துடன் போட்டி தொடங்கியது.
KKR vs CSK: சிஎஸ்கேவில் 3 மாற்றங்கள்
முன்னதாக டாஸ் வென்றிருந்த ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் போட்டி போக போக மெதுவாக மாறும் என்பதை எண்ணி ரஹானே இந்த முடிவை எடுத்தார். சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இன்று நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷேக் ரஷீத், சாம் கரண், தீபக் ஹூடா ஆகியோருக்கு பதில் உர்வில் படேல், டெவான் கான்வே, ரவிசந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளே வந்தனர்.
KKR vs CSK: கலக்கிய நூர் அகமது
முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணிக்கு குர்பாஸ் 11 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அத்துடன் பவர்பிளேவில் ரஹானே – நரைன் ஜோடி சிறப்பாக விளையாடியது. பவர்பிளே முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன்பின் கேகேஆர் சற்று சறுக்க தொடங்கியது. நூர் அகமது வீசிய 8வது ஓவரில் சுனில் நரைன் 26, ரகுவன்ஷி 1 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அஜிங்கயா ரஹானே 48 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், ரஸ்ஸல் புயல் ஈடன் கார்டன்ஸில் வீசியது. 21 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகள் என 38 ரன்களை அடித்து ரஸ்ஸல் நூர் அகமது பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து 19வது ஓவரை வீசிய நூர் அகமது பந்துவீச்சில் ரின்கு சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
KKR vs CSK: 180 ரன்கள் இலக்கு
கடைசி கட்டத்தில் மணீஷ் பாண்டே 1 சிக்ஸர், 1 பவுண்டரி என 28 பந்துகளில் 36 ரன்களை அடித்து ஆறுதல் அளித்தார். இதன்மூலம், கேகேஆர் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை அடித்திருந்தது. நூர் அகமது 4 விக்கெட்டுகள், ஜடேஜா மற்றும் அன்ஷூல் கம்போஜ் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
KKR vs CSK: உர்வில் படேல் மிரட்டல்
தொடர்ந்து, 180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக ஆயுஷ் மாத்ரே டக்அவுட்டானார். ஆனால், அந்த விதத்தில் ஆயுஷ் விட்டுச் சென்ற இடத்தை அடுத்து இறங்கிய உர்வில் படேல் கையில் எடுத்தார். முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடித்து உர்வில் படேல் மிரட்டினார். மொயின் அலி வீசிய 2வது ஓவரிலும் பவுண்டரிகளை பறக்கவிட்டு மிரட்டினாலும், அதே ஓவரில் டெவான் கான்வே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
KKR vs CSK: பவர்பிளேவில் 5 விக்கெட்டுகள்
ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஸ்வின் 4வது வீரராக களமிறங்கினார். உர்வில் படேல் ஒருமுனையில் சிறப்பாக விளையாடி வந்தாலும், 3வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்துகளில் 31 ரன்களை சேர்ந்திருந்தார். அதில் 4 சிக்ஸர், 1 பவுண்டரி அடக்கம். அடுத்து பவர்பிளேவிலேயே அஸ்வின் 8, ஜடேஜா 19 என ஆட்டமிழக்க 6 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 62 ரன்களை சிஎஸ்கே அடித்தது.
KKR vs CSK: ஒரே ஓவரில் 30 ரன்கள்
அதன்பின், பிரேவிஸ் – தூபே ஜோடி விக்கெட்டை இழக்காமல் ரன்ரேட்டை அப்படியே பராமரித்து வந்தது. 10 ஓவர்கள் முடிவில் அதே 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்களை அடித்திருந்தது. அடுத்து 11வது ஓவரை வைபவ் அரோரா வீசினார். அந்த ஓவரில் 6, 4, 4, 6, 6, 4 என 30 ரன்களை அடித்தது மட்டுமின்றி ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தையும் பிரேவிஸ் அடித்தார்.
Capturing the moment in styl
A superb maiden #TATAIPL FIFTY for Dewald Brevi
He’s putting on a show here in Kolkata.
Updates https://t.co/ydH0hsBFgS #TATAIPL | #KKRvCSK pic.twitter.com/5A4jRKYPLy
— IndianPremierLeague (@IPL) May 7, 2025
ஆனால், அடுத்து வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் பிரவிஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்ஸருடன் சேர்ந்து 52 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தோனி, தூபே உடன் இணைந்து பொறுமை காட்டினார். ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் சென்றது. 19வது ஓவரில் தூபே 40 பந்துகளில் 45 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் நூர் அகமது 2 ரன்களில் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரை ரஸ்ஸல் வீச முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தோனி ஆட்டத்தை ஓரளவு முடித்துவைத்தார். ஓவரின் 4வது பந்தில் அன்ஷூல் கம்போஜ் பவுண்டரி அடிக்க 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது. பிரேவிஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
பைவப் அரோரா 3, வருண் சக்ரவர்த்தி – ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட்டுகள், மொயின் அலி 1 விக்கெட்டை வீழ்த்தினர். கேகேஆர் அணிக்கு இன்னும் 2 போட்டிகளே இருக்கும் நிலையில், பிளே ரேஸில் இருந்து வெளியேறியிருக்கிறது.