கொல்கத்தா,
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை – கொல்கத்தால் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர் தோனி, சுனில் நரினை ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதே போல் ரகுவன்ஷி (1 ரன்) அடித்த பந்தையும் கேட்ச் செய்தார். இதையும் சேர்த்து விக்கெட் கீப்பிங்கில் 153 கேட்ச், 47 ஸ்டம்பிங் என மொத்தம் 200 பேரை (276 ஆட்டம்) ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் விக்கெட் கீப்பர் என்ற சிறப்பை தோனி பெற்றுள்ளார். 2-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் (174) உள்ளார்.