Thug Life: ரிலீஸ் எப்போது? – தயாரிப்பு நிறுவனங்கள் அறிக்கை!

இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலால் நாட்டில் அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் தள்ளிவைக்கப்பட்டன.

ஐபிஎல் முதல் திரைப்படங்கள் வரை தள்ளி வைக்கப்பட்ட நிகழ்வுகள் மீண்டும் தொடங்கப்படுகின்றன. அந்தவகையில் தள்ளி வைக்கப்பட்ட கமல் ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் அறிவித்தபடி, ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Thug Life Team
Thug Life Team

மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் திரைப்படத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லஷ்மி, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இன்று Thug Life திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான RKFL, ரெட் ஜெயண்ட் மூவீஸ், மதராஸ் டாக்கீஸ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில நாட்களாக தேசத்துடன் ஒன்றிணைந்து நிற்பதற்காக நாம் நமது கொண்டாட்டங்களை நிறுத்தியிருந்தோம்.

உலகம் முழுவதுமுள்ள பார்வையாளர்களின் புரிதல், பொறுமை மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம். இந்த தருணத்தில் புதிய தெளிவு மற்றும் மரியாதையுடன் நாம் தக் லைஃப் பயணத்தை தொடங்குகிறோம்.

மனதில் உறுதியும், திசைகாட்டியா படைப்பாற்றலும் நம் முன்னுள்ள சாலையை வடிவமைக்கின்றன.

வரவிருக்கும் மைல்கல்கள்…

மே 17 2025 மாலை 5 மணிக்கு தல் லைஃப் ட்ரெய்லர் வெளியீடு

மே 24 2025-ல் ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் குழுவின் இசைக்கச்சேரியுடன் சென்னை சாய்ராம் கல்லூரியில் தக் லைஃப் இசை வெளியீடு.

05 ஜூலை 2025-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியீடு” என்பதைக் குறிப்பிட்டுள்ளனர்.

நாயகன் திரைப்படத்துக்குப் பிறகு மணிரத்னம் மற்றும் கமல் ஹாசன் இணைவதனால் இந்த திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.