2025 ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதற்கிடையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருந்ததன் காரணமாக ஐபிஎல் தொடர் மே 8ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இச்சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடர் வரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது.
தொடர் நிறுத்தப்பட்ட நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிநாட்டு வீரர்கள் அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்புவதாகவும் அவர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி வந்தன. இதனால் ஐபிஎல் அணிகள் பாதிக்கப்படும் நிலை இருந்தது. குறிப்பாக ஆர்சிபி அணியில் இருந்து மூன்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் விலகும் சூழ்நிலை இருந்தது.
இந்த நிலையில், அந்த வெளிநாட்டு வீரர்களில் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் ஆர்சிபி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹேசில்வுட்டுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு இருந்தது. இதனால் அவர் ஆர்சிபி விளையாடிய கடைசி போட்டி அதாவது சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. மேலும், அவர் அடுத்த மாதம் 11ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாட உள்ளார். எனவே அவர் ஓய்வு எடுப்பார் என கூறப்பட்டது. ஆனால் தற்போது ஆர்சிபி அணிக்கு திரும்புகிறார். இது அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் ஆர்சிபி அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். விளையாடிய 11 போட்டிகளில் 8ல் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் 2வது புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. கண்டிப்பாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் நிலையில் அந்த அணி உள்ளது. மேலும், இந்த ஆண்டு அந்த அணி நல்ல பலத்துடன் இருப்பதால், நிச்சயம் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் படிங்க: கடைசி வரை விராட் கோலியால் இந்த ஒரு சாதனையை பூர்த்தி செய்ய முடியவில்லை!
மேலும் படிங்க: விராட் கோலி ஓய்வுக்கு காரணமே பிசிசிஐ தான் – முகமது கைப் பரபரப்பு குற்றச்சாட்டு