ஆசை காட்டி மோசம் செய்த பிசிசிஐ.. பார்டர் கவாஸ்கர் தொடரின்போது நடந்தது என்ன?

இந்தியா கடைசியாக ஆஸ்திரேலியாவுடன் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய 1 போட்டியில் மட்டுமே வென்றது. 1 போட்டி டிராவாகவும் மற்ற மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில், இத்தொடரின் போதுதான், பிசிசிஐ விராட் கோலிக்கு கேப்டன் பதவி கொடுக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை இந்தியாவும் இரண்டாவது போட்டியை ஆஸ்திரேலியாவும் வென்றது. இச்சூழலில் கடைசி மூன்று போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக இருக்க வேண்டும் என 2வது போட்டியின்போது பேச்சுவார்த்தை நடந்ததாக தெரிய வந்துள்ளது. ஆனால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அணியின் சூழ்நிலைகள் மாற, ரோகித் சர்மாவே கேப்டனாக தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடைசி போட்டியில் ரோகித் சர்மாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு அவர் அந்த போட்டியில் இருந்து விலகினார். 

அப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டது. தொடரின் நடுவின் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கேப்டன் பதவியை பும்ராவுக்கு அளிப்பதா அல்லது விராட் கோலிக்கு அளிப்பதா என்ற விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் பேச்சுவார்த்தையின் முடிவில் ரோகித் சர்மாவே கேப்டனாக தொடர வைப்பது என்று முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. தொடரின் முடிவில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா தோற்றது. இதையடுத்து விராட் கோலி மீது பிசிசிஐ கடும் கோபத்தை காட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிசிசிஐ பல்வேறு விதிகளை விதித்தது. 

இந்த நிலையில், ரோகித் சர்மா ஓய்வு அறிவித்த பின்னர் யாரை இந்திய அணியின் கேப்டனாக நியமிப்பது என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், புதிய கேப்டனை தேர்வு செய்து அவரை வளர்த்தேடுக்கும் வரையில், தான் கேப்டனாக இருக்க கோலி நினைத்துள்ளார். இதை பிசிசிஐயிடமும் விராட் கோலி தெரிக்க, அதனை மறுத்ததாக கூறப்படுகிறது. இப்படி பல விதங்களில் விரக்த்தி அடைந்த விராட் கோலி இறுதியில் ஓய்வு முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.  

மேலும் படிங்க: இந்த 2 வீரர்கள் சென்னை அணியில் இல்லை! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மேலும் படிங்க: இந்த வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை? யார் அந்த வீரர்? என்ன காரணம்?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.