சென்னை; தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் மதுபான நிறுவனத்தில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை, குற்றம் சாட்டி உள்ள நிலையில், இந்த முறை கேட்டில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய நபரான ரத்தீஷ் வீட்டில் சோதனை நடைபெற இருப்பதை அறிந்துகொண்ட அவர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து அவரது வீட்டுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர். அரசு மதுபான விற்பனை நிறுவனமான டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு கூறி உள்ளது. அதாவது, […]
