கோபத்துடன் வெளியேறிய சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பந்த் தொடர்பாக முக்கிய முடிவு!

ஐபிஎல் 2025 போட்டிகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்து அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் மூன்று அணிகள் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். அதே சமயம் நான்கு அணிகள் இந்த பிளே ஆப் ரேஸில் இருந்து விலகி உள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றதால் பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறி உள்ளது லக்னோ. இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 7 போட்டிகளில் தோல்வி அடைந்தது லக்னோ. இதற்கு கேப்டன் ரிஷப் பந்த்-ம் ஒரு முக்கிய காரணம். ஐபிஎல் 2025 தொடர் முழுக்க அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை.

மேலும் படிங்க: சிஎஸ்கே கேப்டன் இனி ருதுராக் கிடையாது.. புதிய கேப்டனை நியமிக்க திட்டம்?

ரிஷப் பந்த்

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பந்தை கிட்டத்தட்ட 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது, மேலும் தங்களின் கேப்டனாகவும் ஆக்கியது. ஆனால் இந்த தொடரும் முழுவதும் பந்த் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டு வருகிறார். இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் மொத்தமாக வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு போட்டியில் கூட 200 ஸ்டிரைக் ரேட் வரவில்லை. நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 7 ரன்கள் மட்டுமே அடித்தார். லக்னோ அணிக்கு முக்கியமான இந்த போட்டியில் ரிஷப் பந்த் அவுட் ஆனதை தொடர்ந்து அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார்.

Sanjiv Goenka left the balcony out of anger after seeing 27 crores Rishabh Pant failing in back to back 12th game!! pic.twitter.com/MpOLClJ5rP

— Rajiv (@Rajiv1841) May 19, 2025

பந்தின் மீது சஞ்சீவ் கோயங்கா கோபமாக இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கேஎல் ராகுல் மற்றும் சஞ்சீவ் கோயங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக தான் ராகுல் லக்னோ அணியை விட்டு வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பந்தை 27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் சஞ்சீவ் கோயங்கா. ஆனால் அது அவருக்கு கை கொடுக்கவில்லை.  ஒரு போட்டியில் கூட 27 கோடியை ஈடு கட்டும் அளவிற்கு பந்த் விளையாடவில்லை. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே பந்த் அரை சதம் அடித்துள்ளார். அதன் பிறகு அவரது அதிகபட்ச ஸ்கோர் 18 ரன்கள் தான். தொடர்ந்து டி20 போட்டிகளில் சொதப்பி வருவதால் அடுத்த ஆண்டு சஞ்சீவ் கோயங்கா பந்தை அணியில் இருந்து வெளியேற்றலாம் என்று கூறப்படுகிறது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 115 ரன்கள் சேர்த்தது. மிச்சல் மார்ஸ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். இவர்கள் ஆட்டமிழந்த பிறகு போட்டி மீண்டும் சன்ரைசஸ் பக்கம் திருப்பியது. பூரன் 45 ரன்கள் அடித்து இருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்கள் சரிந்தது. 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 அடித்தது லக்னோ. 206 அடித்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய சன்ரைசஸ் சிறப்பாக பேட்டிங் செய்தது.அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், கிளாசன், மெண்டிஸ் சிறப்பாக விளையாட 18.2 ஓவரிலேயே இந்த போட்டியில் வெற்றி பெற்றது சன்ரைசஸ்.

மேலும் படிங்க: ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகுகிறதா? பிசிசிஐ தரப்பில் கூறுவது என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.