புதுச்சேரி புதுச்சேரி அரசு அனத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை இயங்கும் என உத்தரவிட்டுள்ளது. இன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ”2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை பருவத்தை முன்னிட்டு, குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் பெருமளவில் பெறப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறும் போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி […]
