ENG vs IND: கில்லுக்கு கேப்டன்ஸி… 2 தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு – இந்திய அணி அறிவிப்பு!

ENG vs IND, Team India BCCI Announced: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்த டெஸ்ட் தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய, பிசிசிஐ தேர்வுக்குழு இன்று கூடியது. கூட்டத்திற்கு பின்னர் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று மாலை இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

ENG vs IND: இங்கிலாந்து – இந்தியா 5 டெஸ்ட் போட்டிகள்

இங்கிலாந்தில் வரும் ஜூன் 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதிவரை ஐந்து டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன. ஹெட்டிங்லீ மைதானத்தில் (ஜூன் 20 – ஜூன் 24) முதல் டெஸ்ட் போட்டி, எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் (ஜூலை 2 – ஜூலை 6) 2வது டெஸ்ட் போட்டி, புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் (ஜூலை 10 – ஜூலை 14) 3வது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் (ஜூலை 23 – ஜூலை 27) 4வது டெஸ்ட் போட்டி மற்றும் லண்டன் ஓவல் மைதானத்தில் (ஜூலை 31 – ஆகஸ்ட் 4) 5வது டெஸ்ட் போட்டியும் நடைபெறுகிறது. 

Shubman Gill-led #TeamIndia are READY for an action-packed Test series

A look at the squad for India Men’s Tour of England#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/y2cnQoWIpq

— BCCI (@BCCI) May 24, 2025

ENG vs IND: இந்த முக்கிய வீரர்களுக்கு இடமில்லை

ரோஹித் சர்மா, விராட் கோலி, ரவிசந்திரன் அஸ்வின் ஆகிய சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவித்த பின்னர், இந்திய அணி இளம் வீரர்களை அதிகம் நம்பி களமிறங்குகிறது. புஜாரா, ரஹானே போன்ற சீனியர் வீரர்களுக்கும் இந்திய அணியில் இடமளிக்கப்படவில்லை. ஷமியின் மோசமான பார்ம் காரணமாக அவருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சர்ஃபராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், தனுஷ் கோட்டியான் உள்ளிட்ட வீரர்கள் பிரதான அணியில் இடம்பிடிக்க இன்னும் காத்திருக்க வேண்டும். இந்திய ஏ அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர்.

ENG vs IND: கில் கேப்டன், பண்ட் துணை கேப்டன்

அந்த வகையில், இன்று அறிவிக்கப்பட்ட அணியில் சுப்மான் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பிசிசிஐயின் இந்த முடிவு ஏற்கெனவே தெரிந்ததுதான் எனலாம். டாப் ஆர்டரில் விளையாடுவதற்கு மட்டும் அபிமன்யூ ஈஸ்வரன், கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், சாய் சுதர்சன் என பல வீரர்கள் உள்ளனர்.

மிடில் ஆர்டரை பொறுத்தவரை கருண் நாயர், ரிஷப் பண்ட், துருவ் ஜூரேல் உள்ளிட்ட பேட்டர்கள் இருந்தனர். ஆல்-ரவுண்டரை பொருத்தவரை ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சில் பும்ரா தலைமை தாங்க முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் உள்ளனர். நிதிஷ் மர்றும் ஷர்துலும் வேகப்பந்துவீச்சில் கைப்பொடுப்பார்கள். சுழற்பந்துவீச்சில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உடன் குல்தீப் யாதவும் இடம்பெற்றுள்ளார்.

ENG vs IND: அனுபவ வீரர்கள் குறைவு

பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் இந்திய அணி வலிமையான அணியாகவே உள்ளது. இதில் ஜடேஜா (36), கேஎல் ராகுல் (33), கருண் நாயர் (33), ஷர்துல் தாக்கூர் (33), ஜஸ்பிரித் பும்ரா (31), முகமது சிராஜ் (31), குல்தீப் யாதவ் (30) என இந்த 7 மட்டுமே 30 வயதை கடந்தவர்கள். மற்ற 11 வீரர்களும் இளம் வீரர்கள் மற்றும் குறைந்த அளவிலான டெஸ்ட் போட்டிகளிலேயே விளையாடிருக்கிறார்கள். மேலும், சிலருக்கு இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்காது. அந்த வகையில், இந்திய அணிக்கு இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணம் சவாலானதாக இருக்கும் எனலாம். கடந்த 2022 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்தியா 2-2 என்ற கணக்கில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது. 

ENG vs IND: இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட் திருவிழா

இங்கிலாந்து அணியின் கோடை கால கிரிக்கெட் சீசன் தொடங்கியிருக்கிறது. கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் ஒருபக்கம் நடைபெறுகின்றன. தற்போது இங்கிலாந்து – ஜிம்பாப்வே அணிகள் 4 நாள்கள் மட்டும் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. இதற்கிடையில், மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜூன் 10ஆம் தேதி வரை 3 ஓடிஐ போட்டிகள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. 

தொடர்ந்து, ஜூன் 11ஆம் தேதி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கு பிறகே, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இதற்கிடையில் இந்தியா ஏ அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 2 அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணியுடனும், இந்தியா ஏ அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது.  

ENG vs IND: இந்திய அணி – 18 வீரர்கள்!

சுப்மான் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன், விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுத்ரசன், அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரேல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.