Aadhaar Card Misuse: நமது நாட்டு குடிமக்களுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. ஆனால் அது தவறான கைகளுக்குச் சென்றால், அது அட்டைதாரருக்கு நேரடி இழப்பை ஏற்படுத்தும். ஆகையால் அதைப் பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியம்.
நம்மிடம் பொதுவாக பான் கார்டு, ரேஷன் கார்டு. ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற பல வகையான ஆவணங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. ஆனால் தேவைப்படும் நேரத்தில் ஒரு ஆவணம் காணாமல் போனாலும் வேலை நடக்காமல் பிரச்சனை ஏற்படலாம். இந்த ஆவணங்கள் தவறான கைகளுக்குச் சென்றாலும் மிகப்பெரிய பிரச்சனைகள் வரக்கூடும்.
உதாரணமாக, ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டால், தற்போது, மிக முக்கியமான ஆவணங்களின் பட்டியலில் ஆதார் அட்டை முதலிடத்தில் உள்ளது. உங்கள் ஆதார் அட்டை தவறான கைகளுக்குச் சென்றாலோ அல்லது உங்கள் ஆதார் அட்டை உங்களுக்கே தெரியாமல் தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ என்ன செய்வது? இதுபோன்ற சூழ்நிலையில், நிதானமாக செயல்படுவது மிக அவசியம். உங்கள் ஆதார் அட்டையின் ஹிஸ்டரி -ஐ செக் செய்து இதைக் கண்டறியலாம். மேலும், ஆதார் அட்டையின் தவறான பயன்பாட்டையும் தடுக்கலாம். இதை எப்படி செய்வது என இங்கே காணலாம்.
Aadhaar Card: ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
நமது ஆதார் அல்லது அது தொடர்பான தகவல்களை பல இடங்களில் பகிர்ந்து கொள்கிறோம். உதாரணமாக, வங்கியில், சிம் கார்டு வாங்கும்போது, அல்லது வேறு சில இடங்களிலும் இந்த தகவல்கள் நமக்கு தேவைப்படுகின்றன. இப்படி நாம் பல இடங்களில் நமது அதார் அட்டையை கொடுக்கும் போதுதான் மோசடி அதிகமாகிறது. இவற்றில் எங்கு வேண்டுமானாலும், நமது ஆதார் அட்டை தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
ஆதார் தவறாகப் பயன்படுத்தப்பட்டதா? இப்படி செக் செய்யலாம்
ஸ்டெப் 1
– உங்கள் ஆதார் அட்டையின் வரலாற்றை செக் செய்து, அது தவறாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அறிய விரும்பினால், அதை எளிதாக செய்யலாம்.
– இதற்கு முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://myaadhaar.uidai.gov.in க்குச் செல்ல வேண்டும்
– இங்கே லாக் இன் என்பதில் கிளிக் செய்து, பின்னர் உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும்
– இதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஒரு OTP வரும், அதை உள்ளிட்டு நீங்கள் லாக் இன் செய்யலாம்.
ஸ்டெப் 2
– இதற்குப் பிறகு Section -க்குச் செல்ல வேண்டும்
– இங்கே நீங்கள் பல விருப்பங்களைக் காண்பீர்கள், அங்கே ‘Authentication History’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
– இதன் பிறகு உங்கள் ஆதார் அட்டை எங்கு, எப்போது பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
செயல்பாடு சந்தேகத்திற்குரியதாகத் தோன்றினால், இந்த நடவடிக்கைகளை எடுக்கவும்
– ஆதார் அட்டையின் ஹிஸ்டரி -ஐ செக் செய்த பிறகு, ஆதாரில் ஏதேனும் சிக்கல் அல்லது தவறான பயன்பாடு இருப்பதாக உங்களுக்கு தோன்றினால், முதலில் உங்கள் ஆதார் பயோமெட்ரிக்கை லாக் செய்யலாம். இதன் மூலம், உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் கருவிழி ஸ்கேன் மற்றும் கைரேகையை தவறாகப் பயன்படுத்த முடியாது.
இதன் பிறகு நீங்கள் UIDAI இன் உதவி எண் 1947 இல் உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம்.