மாதவரம்: புறநகர் பகுதியான செங்குன்றம் எனப்படும் ரெட்ஹில்ஸ் பேருந்துநிலையம் மேம்படுத்தும் பணி நடைபெறுவதால், அங்கு வரும் சில பேருந்துகளின் வழித்தடங்கள் தற்காலைகமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வெளியாகி உள்ளது. செங்குன்றம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், இப்பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட 36 வழித்தடங்கள், 202 பேருந்துகள் 24.06.2025 அன்று முதல் புழல் ஏரி எதிர்புறம் உள்ள சாமியார் மடம் காலி மைதானத்திலிருந்து இயக்கப்பட உள்ளது என மாநகர் போக்குவரத்துக் […]
