அட்லாண்டா,
கிளப் அணிகளுக்கான 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் நேற்று முன்தினம் இரவு ‘ஜி’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) 6-0 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் (ஐக்கிய அரபு அமீரகம்) கிளப்பை பந்தாடி 2-வது வெற்றியை பெற்றதுடன் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.
இதேபிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் யுவென்டஸ் (இத்தாலி) அணி 4-1 என்ற கோல் கணக்கில் வைடாட் அத்லெடிக் கிளப்பை (மொராக்கோ) தோற்கடித்து 2-வது வெற்றியுடன் அடுத்த சுற்றை எட்டியது. ‘எச்’ பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) 3-1 என்ற கோல் கணக்கில் பச்சுகா (மெக்சிகோ) அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.