கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி ஒருபோதும் உடையாது: முத்தரசன் உறுதி

சேலம்: கொள்கை ரீதியி​லான திமுக கூட்​டணி ஒரு​போதும் உடை​யாது என்று இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் கூறி​னார். சேலத்​தில் நடை​பெறவுள்ள இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில மாநாட்​டுக்​கான இலச்​சினையை வெளியிடும் நிகழ்ச்சி சேலத்​தில் நேற்று நடை​பெற்​றது. கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் முத்​தரசன் மாநாடு இலச்​சினையை வெளியிட்டார்.

பின்னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கட்​சி​யின் 26-வது மாநில மாநாடு சேலத்​தில் ஆகஸ்ட் 15 முதல் 18-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் மூத்த தலை​வர் நல்​ல​கண்​ணு, தேசிய செய​லா​ளர் டி.​ராஜா, முதல்​வர் ஸ்டா​லின் மற்​றும் கூட்​ட​ணிக் கட்சி நிர்​வாகி​கள் கலந்து கொள்​கின்​றனர்.

தமிழகத்​தில் ஆட்சி அதி​காரத்​தைக் கைப்​பற்​று​வோம் என்று அமித்ஷா கூறுகிறார். இதற்கு கருத்து கூறாமல், எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி மவுன​மாக இருக்​கிறார். பாஜக கூட்​டணி நிர்​பந்​தத்​தால் உரு​வாக்​கப்​படு​கிறது. தமிழக முதல்​வர் ஸ்டா​லின் சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறார்.

தேர்​தலின்​போது அறி​வித்த வாக்​குறு​தி​களை நிறைவேற்றி வரு​கிறார். தேர்​தலுக்​குள் அனைத்து வாக்​குறு​தி​களை​யும் நிறைவேற்​றும் வகை​யில் அவர் செயல்​பட்டு வரு​கிறார். சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை ஏற்​பட்​டால் உடனடி​யாக நடவடிக்கை எடுக்​கிறார். வகுப்​பு​வாத சக்​தி​கள் கால் ஊன்​றக்​கூ​டாது என்​ப​தில் முதல்​வர் உறு​தி​யாக இருக்​கிறார்.

தமிழக அரசி​யல் வரலாற்​றில் எந்த கூட்​ட​ணி​யும் இவ்​வளவு காலம் நீடித்​தது கிடை​யாது. திமுக தலை​மையி​லான கூட்​டணி கொள்கை ரீதியி​லானது. எனவே, இக்​கூட்​டணி ஒரு​போதும் உடை​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார். திருப்​பூர் எம்​.பி. சுப்​ப​ராயன், சேலம் மாவட்​டச் செய​லா​ளர் மோகன் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.