அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இந்திய அணி சில மாற்றங்களை மேற்கொள்ளதாக கூறப்படுகிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் சுப்மான் கில் ஆதியோர் உள்ளனர். முதல் போட்டிகளில் செய்த தவறை சரி செய்து கொள்வதற்காக அணியில் சில மாற்றங்களை இந்திய அணி மேற்கொள்ள உள்ளது.
மேலும் படிங்க: 11 பேர் இறப்புக்கு ஆர்சிபி அணியே முழு காரணம்.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தடையா?
பும்ராவிற்கு ஓய்வு
முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக வந்து வீசிய பும்ரா முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். இந்நிலையில் அதிக வேலைப்பளு காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா தொடரில் 5 போட்டிகளிலும் விளையாடியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. அதே தவறை மீண்டும் செய்ய வேண்டாம் என்பதால் இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக ஹர்ஸ்தீப் சிங் அல்லது ஆகாஷ் தீப் ஆகிய இருவரில் ஒருவர் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
ஷர்தூல் தாக்கூருக்கு பதில் நிதிஷ்குமார் ரெட்டி?
பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ஷர்தூல் தாக்கூர் பவுலிங் ஆல்ரவுண்டராக இடம் பெற்று இருந்தார். இருப்பினும் அவரால் போதிய இம்பாக்ட்டை கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடி இருந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதீஷ் குமார் ரெட்டியால் பேட்டிங்கில் கூடுதலாக சில ரன்கள் அடித்து கொடுக்க முடியும். இதன் காரணமாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கூடுதல் ஸ்பின்னர் ஆக வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்ற பயிற்சியில் இருவரும் நீண்ட நேரம் பந்து வீசி உள்ளனர். இவர்களது பவுலிங்கை கவுதம் கம்பீர் தீவிரமாக கண்காணித்து வருகிறார். வாஷிங்டன் சுந்தரால் பேட்டிங்கிலும் கூடுதல் பலம் சேர்க்க கொடுக்க முடியும் என்பதால் பிளேயிங் லெவனில் அவர் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. இருப்பினும் பும்ரா அணியில் இல்லாத நிலையில் விக்கெட் எடுத்து கொடுக்க ஒரு பவுலர் வேண்டும். அதனால் குல்தீப் யாதவ் மீதும் ஒரு கண் வைத்துள்ளனர். முதல் போட்டியில் அதிகமான கேட்ச்களை தவறவிட்ட ஜெய்ஸ்வால்க்கு ஸ்லிப் பில்டிங் பயிற்சி அளிக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி அந்த இடத்தில் நின்று கேட்சிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனால் பில்டிங்கிலும் இந்திய அணி மாற்றங்களை செய்ய உள்ளது என்பது தெரிய வருகிறது. அதே போல முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் ஆகிய இருவரில் ஒருவர் மட்டுமே இரண்டாவது டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிங்க: தட்டி தூக்குவோம்.. சஞ்சு சாம்சனை வாங்குவது குறித்து CSK முக்கிய தகவல்!