சமீபமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை வாங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. அதற்கான முயற்சிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது உறுதியாகி உள்ளது. கிரிக்கெட் செய்தி தளத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரி ஒருவர், சஞ்சு சாம்சனை வாங்க சென்னை அணி நிர்வாகம் ஆர்வமாக உள்ளதாக கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பேசும்பொருளாகி உள்ளது. ஒருபக்கம் ரசிகர்கள் இதனை வரவேற்றாலும், சிலர் தேவையில்லாத செயல் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் சஞ்சு சாம்சனை வாங்கும் திட்டத்தில் சென்னை அணி இருந்தால், அது ருதுராஜை வெளியேறும் திட்டமே என சிலர் கூறி வருகின்றனர்.
நடந்து முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்வாட் சில போட்டிகளுக்கு பின்னர் காயம் ஏற்பட்டிருக்கிறது என கூறி அவர் நீக்கப்பட்டார். பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்தினார். இந்த நிலையில்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் வாங்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது.
ஆர்ஆர் உடனான சஞ்சு சாம்சன் பிரச்சனை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையேயான சிறு உறசல் கூட இந்த பேச்சுக்கு ஒரு காரணம் ஆகும். ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டனாக பெரும்பாலான போட்டியில் ரியான் பராக் தான் இருந்தார். அவரையே அந்த அணி நிர்வாகமும் கேப்டனாக்க முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதாவது ரியான் பராக்கின் உறவினர் ஒருவர் அணியின் உரிமையாளர்களில் ஒருவராக இருப்பதாகவும் அதனால் ரியான் பராக்கை கேப்டனாக்க அழுத்தம் இருப்பதாகவும் இதற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் சமதம் தெரிவித்ததாகவும் இதனாலேயே சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவர் வேறு அணிக்கு செல்ல விருப்பினார். அதை பயன்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை டிரேட் முறையில் வாங்க முயற்சிக்கிறது. மேலும், தோனி ஓய்வு பெற்ற பின்னர் ஒரு பலமான பேட்டர் மற்றும் விக்கெட் கீப்பர் அணிக்கு தேவை என்பதால், சஞ்சு சாம்சனை வாங்க சிஎஸ்கே முயற்சிக்கிறது. அதே சமயம் சஞ்சு சாம்சனுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்திய அனுபவம் உள்ளதால், அவரை வாங்க சிஎஸ்கே விரும்புவதாக கூறப்படுகிறது . எனவே சஞ்சு சாம்சனை வாங்க முயற்சிப்பதே ருதுராஜ் கெய்க்வாட்டை அனுப்பும் திட்டம்தான் என கூறப்படுகிறது.
டிரேட் முறை
சமீபமாகவே சஞ்சு சாம்சனை ட்ரேட் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. உண்மையிலேயே டிரேட் முறை மூலம் சென்னை அணியால் சஞ்சு சாம்சனை வாங்க முடியுமா? டிரேட் விதிகள் செல்வதென்ன? இதுவரையில் ஐபிஎல்லில் நடந்த மிகப்பெரிய ட்ரேட் என்றால் ஆதன் அது ஹர்திக் பாண்டியாதான். 2022ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு முதல் வருஷமே கேப்டனாக ஹர்திக்பாண்டியா கோப்பையை வென்று கொடுத்தார். 2023ல் அந்த அணியை இறுதி போட்டி வரை கொண்டு சென்றார். அப்படியான கேப்டன் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேட் முறையில் வாங்கியது. அதற்கு ஈடான தொகையை மும்பை அணி குஜராத்திற்கு கொடுத்தது.
ஐபிஎல்லில் வீரர்களை டிரேட் செய்வதற்கென குறிப்பிட்ட காலகட்டம் உள்ளது. ஒரு ஐபிஎல் தொடர் முடிந்து சரியாக ஒரு மாதம் கழித்ததில் இருந்து ஏலத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரைக்கும் வீரர்களை டிரேட் செய்ய முடியும். அதேபோல் ஏலம் முடிந்ததில் இருந்து அடுத்த தொடர் தொடங்குவதற்கு முன்பு வரை வீரர்களை டிரேட் செய்துக்கொள்ளலாம். இதனை இரண்டு முறையில் செய்துக்கொள்ளலாம். ஒன்று, ஒரு வீரரை டிரேட் முறையில் வாங்கும்போது, அந்த வீரர் ஏலத்தில் வாங்கப்பட்ட தொகையை விற்கும் அணிக்கு கொடுக்க வேண்டும். மற்றொன்று, ஒரு வீரருக்கு மாற்றாக மற்றொரு வீரரை கொடுத்து பண்டமாற்று முறையில் வீரர்களை டிரேட் செய்துக்கொள்ளலாம். இந்த நிலையில், சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்குகிறதா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிங்க: CSK-க்கு சஞ்சு சாம்சன் வேண்டவே வேண்டாம்… 3 முக்கிய காரணங்கள் இதோ!
மேலும் படிங்க: IND vs ENG 2nd Test: யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கம்! பிளேயிங் 11ல் வாஷிங்டன் சுந்தர்?