சென்னை: தமிழ்நாடு அரசின் ‘இருதயம் காப்போம்’ திட்டத்தின் கீழ் 18,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். “மருத்துவர் தினம் 2025” முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை சார்பில், வள்ளுவர் கோட்டத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு மருத்துவத்துறையில் மகத்தான பணி செய்த மருத்துவர்களை பாராட்டி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் […]
