லண்டன்,
இங்கிலாந்தில் உள்ள மேற்கு லண்டனில் கடந்த ஆண்டு அக்டோபர் 13-ந்தேதி, சாலையில் சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண்ணை மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த பெண் அவரிடம் இருந்து தப்பி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு ஓடிச் சென்று புகார் அளித்தார்.
அந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதனை தொடர்ந்து அக்டோபர் 23-ந்தேதி பூங்காவில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் சி.சி.டி.வி. கேமராக்களின் உதவியோடு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது இரண்டு சம்பவங்கள் நடந்த இடத்திலும் 24 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நவ்ரூப் சிங் என்ற நபர் இருந்துள்ளார் என்பதை போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி நவ்ரூப் சிங்கைப் பிடித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புகொண்டார்.
இந்த வழகு தொடர்பான விசாரணை ஐசில்வர்த் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நவ்ரூப் சிங் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து அவருக்கு 14 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.