மருத்துவ கல்லூரி அங்கீகாரம் புதுப்பிக்க கோடிக்கணக்கில் லஞ்சம்: மடாதிபதி உட்பட 35 பேர் மீது சிபிஐ வழக்கு

புதுடெல்லி: மத்​திய பிரதேசத்​தின் திகம்​கர் மாவட்​டம், சிப்ரி கிராமத்தை சேர்ந்​தவர் ரவிசங்​கர். ஒன்​பது வயதில் வீட்​டில் இருந்து வெளி​யேறிய அவர், மத்​திய பிரதேசத்​தின் பிண்டு மாவட்​டம், ராவத்​பு​ரா​வில் உள்ள அனு​மன் கோயி​லில் தங்கி ஆன்​மிக பிரச்​சா​ரம் செய்​தார்.

பின்​னர் ராவத்​புரா கிராமத்​தில் 62 ஏக்​கர் பரப்​பள​வில் பிரம்​மாண்ட சிவன் கோயிலை கட்​டி​னார். தற்​போது அவர் ராவத்​புரா சிவன் கோயி​லின் மடா​திப​தி​யாக உள்​ளார். மேலும் மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர் மாநிலங்​களில் மருத்​து​வம், பொறி​யியல், நர்​சிங், பார்​மசி, ஐடிஐ கல்வி நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார்.

சத்​தீஸ்​கர் தலைநகர் ராய்ப்​பூரில் ரவி சங்​கரின் அறக்​கட்​டளை சார்​பில் மருத்​து​வக் கல்​லூரி நடத்​தப்​படு​கிறது. இந்த கல்​லூரி​யில் அண்​மை​யில் மத்​திய அரசின் தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) மூத்த அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். அப்​போது அந்த மருத்​து​வக் கல்​லூரியின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதற்கு சாதக​மாக அதி​காரி​கள் அறிக்கை சமர்ப்​பித்​தனர். இதற்​காக என்​எம்சி அதி​காரி​களுக்கு பெரும் தொகை லஞ்​ச​மாக வழங்​கப்​பட்டுள்ளது.

இதுதொடர்​பாக கடந்த சில நாட்​களுக்கு முன்பு 6 மாநிலங்​களை சேர்ந்த 40 இடங்​களில் சிபிஐ அதி​காரி​கள் ஒரே நேரத்​தில் சோதனை நடத்​தினர். இதன்​அடிப்படையில் மடா​திபதி ரவிசங்​கர், முன்​னாள் ஐஎப்​எஸ் அதி​காரி சஞ்​சய் சுக்​லா, என்​எம்சி மூத்த அதி​காரி​கள் உட்பட 35 பேர் மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்டு உள்​ளது.

இதுகுறித்து சிபிஐ வட்​டாரங்​கள் கூறிய​தாவது: தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி), மருத்​து​வக் கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரத்தை புதுப்பித்து அனுமதி வழங்​கு​கிறது. இதுதொடர்​பாக மருத்​துவக் கல்​லூரி​களுக்கு ஆய்​வுக்கு செல்​லும் என்​எம்சி அதி​காரி​கள் லஞ்​சம் பெறு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன. தனி​யார் மருத்​துவக் கல்​லூரி​களுக்கு அங்​கீ​காரம் வழங்க தலா ரூ.3 கோடி முதல் ரூ.5 கோடி வரை லஞ்​சம் பெறப்​பட்டுள்​ளது.

மடா​திபதி ரவிசங்​கரின் அறக்​கட்​டளை சார்​பில் ராய்ப்​பூரில் நடத்​தப்​படும் மருத்​து​வ​மனை​யின் அங்​கீ​காரத்​தை புதுப்பிக்க என்​எம்சி அதி​காரி​களுக்கு ரூ.56 லட்​சம் வழங்​கப்​பட்டு இருக்​கிறது. தெலங்​கா​னா​வின் வாரங்​கல்​லில் உள்ள தனி​யார் மருத்​துவக் கல்​லூரி​யின் அங்​கீ​காரத்​துக்​காக ரூ.4 கோடி லஞ்​சம் கொடுக்​கப்​பட்டு உள்​ளது. இதே​போல நாடு முழு​வதும் 40 மருத்​துவக் கல்​லூரி​களின் அங்​கீ​காரத்​துக்​காக பல்​வேறு மோசடிகள் நடை​பெற்று உள்​ளன. இவ்​வாறு சிபிஐ வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.