Shubhman Gill, Lords Test : இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக அடுத்ததாக லார்ட்ஸ் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இப்போட்டி ஜூன் 10 ஆம் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டி மீது தான் இப்போது அனைவரது பார்வையும் உள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் முதல் வெற்றியையும் பதிவு செய்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன.
மூன்றாவது போட்டி நடக்கும் லார்ட்ஸ் மைதானம் இந்திய அணிக்கு ஒரு வகையில் பேரும் புகழும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெற்றுக் கொடுத்த மைதானம். 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இந்திய கிரிக்கெட் அணி கபில்தேவ் தலைமையில் வென்றது இந்த மைதானத்தில் தான். 2002 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து நாட்வெஸ்ட் ஒருநாள் போட்டித் தொடரை இந்திய அணி வென்றது. அப்போது மைதானத்தின் கேலரியில் இருந்து சவுரவ் கங்குலி டிசர்ட்டை கழற்றி தலைக்கு மேல் சுழற்றிய வீடியோ, புகைப்படம் இன்றளவும் சோஷியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இப்படியா பேர் புகழைப் பெற்றுக் கொடுத்த லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 19 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. அதில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 4 போட்டிகளை டிரா செய்திருக்கிறது. 12 போட்டிகளில் தோல்வியை தழுவியிருக்கிறது. அதனால் இந்திய அணி இந்த மைதானத்தில் மிகவும் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியம். ஒருவேளை இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றால், அது சுப்மன் கில் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்து வைக்கப்பட வேண்டிய வரலாற்று வெற்றியாக பதிவாகும்.
அப்படியான ஒரு சாதனையை சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி நிகழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியப் பொறுத்தவரை பேட்டிங் மட்டுமே கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. பந்துவீச்சில் சிராஜ், ஆகாஷ் தீப், பும்ரா ஆகியோர் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர். கேஎல் ராகுல், சுப்மன் கில் இருவரின் பேட்டில் இருந்து மட்டுமே இதுவரை நம்பிக்கையான ஸ்கோர்கள் வந்துள்ளன. அதனால், மற்ற பேட்ஸ்மேன்கள் கட்டாயம் விளையாட வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அப்படி அவர்களும் விளையாடியானால் இந்திய அணி இப்போட்டியிலும் வெல்ல அதிக வாய்ப்புள்ளது, லேட்டஸ்ட் தகவலின்படி, எட்ஜ்பஸ்டன் மைதானம் போல் பேட்டிங்கிற்கு உகந்த மைதானமாக லார்ட்ஸ் இருக்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது. பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதால், இப்போட்டி மீது இன்னும் சுவாரஸ்யம் கூடியுள்ளது.
மேலும் படிங்க: தந்தையால் கிரிக்கெட்டுக்கு வந்த 7 டாப் வீரர்கள்.. யாரெல்லாம் தெரியுமா?
மேலும் படிங்க: கெத்து காட்டிய இந்த 3 TNPL வீரர்கள்… மினி ஏலத்தில் IPL அணிகள் நிச்சயம் குறிவைக்கும்!