புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம்

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G, 4G என அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1.02 பெட்டாபிட்ஸ் இணைய வேகத்தை கண்டுபிடித்து ஜப்பான் பொறியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். 1.02 பெட்டாபிட்ஸ் என்பது ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபிட்ஸ் ஆகும். இது இந்தியாவின் சராசரி இணைய வேகமான 63.55 எம்பிபிஎஸ் ஐ விட 16 மில்லியன் மடங்கும் வேகமானது. இந்த இணைய வேகம் மூலம், நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள அனைத்து படங்களையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்து விட முடியும்.

இந்த தொழில்நுட்பம் தற்போது ஆய்வக சோதனையில் இருந்தாலும், எதிர்கால தரவு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முக்கிய படிக்கல்லாக இது பார்க்கப்படுகிறது. எனினும், இந்த அதிவேக இணையம் தற்போது பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு இல்லை. இன்னும் பல ஆண்டுகள் இதற்கு பிடிக்கும் எனத்தெரிகிறது.

இந்த இணைய வேக சேவையை அடைய அவர்கள் ஆயிரத்து 800 கிலோ மீட்டருக்கும் அதிகமான 19-கோர் ஆப்டிக்கல் பைபர் கேபிளை பயன்படுத்தி உள்ளனர். இது, சராசரியாக லண்டனில் இருந்து ரோம் வரையிலான தூரத்துக்கு சமம். ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் பெற்றுள்ள இந்த இணைய சேவை மூலம் ஒட்டுமொத்த நெட்பிளிக்ஸ் வீடியோக்களையும் ஒரு விநாடியில் பதிவிறக்கம் செய்யலாம். 150ஜிபி உள்ள வார்சோன் போன்ற வீடியோ கேம்களை கண் இமைக்கும் நேரத்தில் பதிவிறக்கம் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.