திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கை

புதுடெல்லி: ​திபெத்​தில் சீனா நடத்​தும் உறை​விடப் பள்​ளி​களில் 10 லட்​சம் குழந்​தைகள் கட்​டாய​மாக சேர்க்​கப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

சீனா​வில் 1911-ல் ஏற்​பட்ட ஜின்ஹை புரட்​சிக்​குப் பிறகு திபெத் தனி நாடாக பிரிந்​தது. எனினும், 1950-ல் திபெத்தை சீனா மீண்​டும் தனது கட்​டுப்​பாட்​டில் கொண்​டு​வந்​தது. இதையடுத்​து, திபெத்​திலிருந்து வெளி​யேறிய 14-வது தலாய் லாமா இந்​தி​யா​வில் வசித்து வரு​கிறார். இதனிடையே அடுத்த தலாய் லாமாவை நாங்​கள் தேர்வு செய்​வோம் என சீனா கூறியது. இதற்கு அடுத்த தலாய் லாமாவை தேர்ந்​தெடுக்​கும் அதி​காரம் காடன் போட்​ராங் அறக்​கட்​டளைக்கு மட்​டுமே உள்​ளது என தலாய் லாமா தெரி​வித்​தார்.

இந்​நிலை​யில், திபெத் ஆக் ஷன் நிறு​வனம் (டிஏஐ) வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: திபெத்​தில் சீனா நடத்​தும் உறை​விடப் பள்​ளி​களில் 10 லட்​சம் குழந்​தைகள் கட்​டாயப்​படுத்தி சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். இதில் 4 முதல் 6 வயதுக்​குட்​பட்ட சுமார் 1 லட்​சம் குழந்​தைகளும் அடங்​கு​வர். ஊரகப் பகு​தி​களைச் சேர்ந்த இந்​தக் குழந்​தைகளை பெற்​றோரிட​மிருந்து வலுக்​கட்​டாய​மாக பிரித்து அழைத்து வந்​துள்​ளனர். மீதம் உள்ள 9 லட்​சம் பேர் 6 முதல் 18 வயதுக்​குட்​பட்​ட​வர்​கள் ஆவர். இது மாணவர்​களை அடிமைப்​படுத்​தும் முயற்சி ஆகும். 4,700 ஆண்​டு​கள் பழமை​யான திபெத் கலாச்​சா​ரத்தை அழிக்க சீன அதிபர் ஜி ஜின்​பிங் முயற்​சிக்​கிறார்.

இந்த உறை​விடப் பள்​ளி​களில் கற்​பித்​தல் செயல்​முறை மிகச்​சிறிய வயதிலிருந்தே தொடங்​கு​கிறது. குழந்​தைகள் தங்​கள் தாய்​மொழி​யில் பேசுவதை தடுத்து சீன மொழி​யில் பேச கட்​டாயப்​படுத்​தப்​படு​கின்​றனர். சீன மொழி​யில்​தான் கற்​பிக்​கப்​படு​கி​றது. மேலும் சீனா​வின் கலாச்​சா​ரம், வரலாறு ஆகியவற்றை மட்​டுமே இந்த பள்​ளி​களில் கற்​பிக்​கின்​றனர். சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் முக்​கி​யத்​து​வம் பற்​றி​யும் தொடர்ச்​சி​யாக போ​திக்​கப்​படு​கிறது. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுஉள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.