மாஸ்கோ,
கொரிய தீபகற்பத்தில் ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தைத் தூண்டுகின்றது. இதனை சமாளிக்க அமெரிக்கா, ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகிறது. இதனை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாக வடகொரியா கருதுகிறது. எனவே கூட்டுப்போர் பயிற்சியை கைவிட வேண்டும் என வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்கொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ரஷியாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், `வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியா உருவாக்கி வரும் ராணுவ கூட்டணியை கைவிட வேண்டும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :