SENA நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ரன்கள் அடிப்பதே மிகப்பெரிய சிரமம் ஆகும். ஏனெனில் அங்குள்ள கிரிக்கெட் மைதானங்கள் அதிக பவுன்ஸ் கொண்டதாக இருக்கும். இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அங்கு சென்று விளையாடுவது பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் சில வீரர்கள் இந்த நாடுகளில் ரன்கள் அடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் SENA நாடுகளில் அதிக சதம் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து விராட் கோலி, ராகுல் திராவிட் ஆகியோர் உள்ளனர். சமீபத்தில், இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 10வது சதத்தை அடித்து, கே.எல்.ராகுல் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
மேலும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 10 இந்திய பந்து வீச்சாளர்களின் பட்டியல்!
SENA நாடுகளில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரர்கள்
– சச்சின் டெண்டுல்கர் – 17 சதங்கள்
‘மாஸ்டர் பிளாஸ்டர்’ சச்சின், SENA நாடுகளில் 17 டெஸ்ட் அடித்துள்ளார்/
– விராட் கோலி – 12 சதங்கள்
நவீன கிரிக்கெட்டின் மன்னர் விராட் கோலி 12 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
– ராகுல் திராவிட் – 10 சதங்கள்
‘தி வால்’ என்று அழைக்கப்படும் திராவிட், 10 சதங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
– கே.எல்.ராகுல் – 10 சதங்கள்
கே.எல்.ராகுல், 2025 ஜூலை 12 அன்று லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக தனது 10வது சதத்தை அடித்து, இந்த பட்டியலில் இணைந்தார்.
– சுனில் கவாஸ்கர் – 8 சதங்கள்
இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவாஸ்கர், 8 சதங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
– முகமது அசாருதீன் மற்றும் ரிஷப் பந்த் – 6 சதங்கள்
முன்னாள் கேப்டன் அசாருதீனும், இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தும் தலா 6 சதங்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளனர்.
கே.எல்.ராகுலின் சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில், கே.எல்.ராகுல் தனது 10வது சதத்தை அடித்து, SENA நாடுகளில் இந்தியாவிற்காக அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். இது லார்ட்ஸ் மைதானத்தில் அவரது இரண்டாவது சதமாகும். இந்த சதம், கடினமான இங்கிலாந்து மைதானங்களில் அவரது திறமையை மீண்டும் நிரூபித்தது. SENA நாடுகளின் மைதானங்கள், அவற்றின் வேகமான பந்து வீச்சு மற்றும் மாறுபட்ட வானிலை நிலைகள் காரணமாக எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக உள்ளன. இந்த நாடுகளில் சதம் அடிப்பது ஒருவரின் தனித்திறமையை நிரூபிக்கிறது. சச்சின், விராட் கோலி போன்றவர்கள் இதற்கு முன்பு ஜாம்பவான்களாக இருந்துள்ளனர்.
மேலும் படிங்க: IND vs ENG: இங்கிலாந்து அணி ஏமாற்றியதா? கடுப்பான இந்திய வீரர்கள்! என்ன நடந்தது?