லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா தோற்றதற்கான 5 முக்கிய காரணங்கள்..!!

India vs England Test : லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 193 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 170 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி தோற்றதற்கான 5 முக்கிய காரணங்களை இங்கே பார்க்கலாம். 

டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யஷஸ்வி ஜெய்ஷ்வால் (4 & 0), சுப்மன் கில் (17 & 6), கருண் நாயர் (40 & 16) ஆகியோர் இரண்டு இன்னிங்ஸிலும் மோசமான பேட்டிங் ஆடினர். இவர்களில் யாரேனும் ஒருவர் சிறப்பாக ஆடியிருந்தால் கூட இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க முடியும். இப்போட்டியில் முழுக்க முழுக்க KL ரஹுல் (100 & 39), ரிஷப் பாண்ட் (74 & 9), ஜடேஜா (72 & 61) மட்டுமே சிறப்பாக பேட்டிங் ஆடி இந்திய அணியின் வெற்றிக்காக போராடினர், ஆனால் மற்றவர்கள் இவர்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப்பை கொடுக்கவில்லை. அதேபோல், முதல் இன்னிங்ஸில் பின்வரிசை பேட்டர்கள் சொதப்பியதால் லீட் எடுக்கவில்லை. ஒழுங்காக ஆடியிருந்தால் இந்திய அணி முதல் இன்னிங்ஸிலேயே லீட் எடுத்திருக்க முடியும்.

பின் வரிசை பேட்டர்ஸின் தோல்வி

முதலாவது இன்னிங்ஸில் இந்தியா 376/6 என ஒருகட்டத்தில் இருந்தது. ஆனால், கடைசியில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கடைசி 4 விக்கெட்களுக்கு 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதுவே, இந்திய அணியின் சரிவை சநித்ததற்கு மிக முக்கிய காரணம். அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன் டார்கெட் நோக்கி ஆடும்போது 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசியில் 170 ஆல் அவுட் ஆனது. ஜடேஜா தனியாக போராடினார், ஆனால் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் ரெட்டி போன்றோர் அவருக்கு பேட்டிங்கில் உதவவில்லை

பிட்ச் சாதகம்

லார்ட்ஸ் பிட்ச் நாளுக்கு நாள் கடினமாகியது, முதலில் பேட்டிங் செய்த அணிக்கு இது பெரும் வாய்ப்பாக மாறியது. டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட் செய்யவும், 2வது பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மைதானம் ஒத்துழைக்கவில்லை. இதனால் பந்துகளை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர்.

ஜோப்ரா ஆர்சர் சிறப்பான பந்துவீச்சு

4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்த ஜோப்ரா ஆர்சர், இங்கிலாந்து அணியின் நம்பிக்கை தூணாக இருந்தார். முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே விக்கெட்டை எடுத்த அவர், 2வது இன்னிங்ஸில் ரிஷப் பாண்ட், வாஷிங்டன் சுந்தரை அவுட்டாக்கினார். மொத்தம் 23.2 ஓவர்கள் வீசி 2 விக்கெட்கள் எடுத்ததுடன் எகானமி விகிதம் 2.22 என்ற அளவில் கச்சிதமாக பந்துவீசி இந்தியாவின் ரன் ஓட்டத்தை முடக்கினார். 

எக்ஸ்ட்ரா ரன்கள் + இங்கிலாந்தின் பேட்டிங்

இந்தியா லெக் பைஸ், வைட்ஸ் உள்ளிட்ட எக்ஸ்ட்ரா மூலம் 63 ரன்கள் வாரி வழங்கியது. இதுவே இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அத்துடன் பேட்டிங்கில் இங்கிலாந்தின் கடைசி வரிசையில் பிரைடன் கார்ஸ் (56 ரன்கள்), ஜேமி ஸ்மித் (51 ரன்கள்) எடுத்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது. அதேநேரத்தில் இந்தியாவின் கடைசி வரிசை பேட்டர்கள் 11 ரன்களில் 4 விக்கெட்களை கொடுத்து முதல் இன்னிங்ஸில் வெளியேறினர். இவையெல்லாம் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணங்கள்.

மேலும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் கழட்டி விடும் 3 வீரர்கள்! யார் யார் தெரியுமா?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.