Washington Sundar: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி விரைவாகவே விக்கெட்டை இழந்ததுதான் இந்த தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்திய அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. கடைசி நாளில் இந்திய அணிக்கு 135 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அதனை எடுக்க முடியாமல் தடுமாறி தோல்வி அடைந்தது.
முன்னதாக நான்காவது நாள் முடிவில், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த வாஷிங்டன் சுந்தர், நாங்கள் 5வது நாளில் எளிதாக வெற்றி பெற்று விடுவோம். மதிய உணவு நேரத்திற்கு பின்னர் வெற்றி இலக்கை நாங்கள் எட்டி விடுவோம் என கூறி இருந்தார். தற்போது வாஷிங்டனின் இந்த பேச்சு விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வாஷிங்டன் சுந்தர் இப்படி பேசவே, இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக வாஷிங்டன் சுந்தரின் இந்த பேச்சை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஜாஸ் பட்லர் கருத்து
இந்த நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர் வாஷிங்டன் சுந்தரின் இந்த பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ளார். “வாஷிங்டன் சுந்தரின் பேட்டியை நான் பார்த்தேன். உண்மையில் அவர் அப்படி கூறினாரா என்று தான் எனக்கு முதல் தோன்றியது. மறுபுறம் அவர் சொல்ல வந்ததை வேறு மாதிரியாக கூறிவிட்டாரோ என்றும் எனக்கு தோன்றியது. எது எப்படியாக இருந்தாலும் லாட்ர்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டது. தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.
வாய் பேச கூடாது திறமைதான் பேச வேண்டும்
வாஷிங்டனின் இந்த பேச்சை இங்கிலாந்து வீரர்கள் கண்டிப்பாக பார்த்திருப்பார்கள். அது நிச்சயம் அவர்களை கோபப்படுத்தி இருக்கும். இதனால் கண்டிப்பாக வெற்றி பெற்று தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கிலாந்து வீரர்கள் விளையாடி இருப்பார்கள். இப்போது, தோல்விக்கு பின்னர் வாஷிங்டன் சுந்தர் ஏன் அந்த வார்த்தையை கூறினோம் என வருத்தப்பட்டு இருப்பார்” என ஜாஸ் பட்லர் கூறினார். முன்னதாக வாஷிங்டன் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த டேவிட் லயார்ட், “நாம் வாய் பேசக் கூடாது, களத்தில் நம் திறமை மட்டுமே பேச வேண்டும்” என கூறி இருந்தார்.
மேலும் படிங்க: யுவராஜ் சிங்கின் முன்னாள் காதலிகள்.. பிரபல நடிகையும் இந்த லிஸ்ட்ல இருக்காங்களா?
மேலும் படிங்க: இனி இந்த வீரர் வேண்டாம்… தொடரை வெல்ல இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ!