ஆடி பூரத்தை முன்னிட்டு ஜூலை 28ம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடி பூர விழா கொண்டாடப்பட உள்ளதை அடுத்து அன்றைய தினம் அனைத்து தமிழக அரசின் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அவசர பணிகள் மற்றும் கருவூலங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
