லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் நங்கல் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் உள்ள கலவை தொட்டியை இன்று ஊழியர்கள் 4 பேர் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
கலவை தொட்டிக்குள் இறங்கி ஊழியர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது திடீரென விஷவாயு தாக்கியது. இதில் ஊழியர்கள் 4 பேரும் கலவை தொட்டிக்குள் மயங்கி விழுந்தனர்.
இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக்குழுவினர், பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து கலவை தொட்டிக்குள் இறங்கி மயங்கி கிடந்த 4 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
4 பேரையும் பரிசோதித்த டாகர்கள் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.