கான்வே அரைசதம்…. ஜிம்பாப்வேயை வீழ்த்திய நியூசிலாந்து

ஹராரே,

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதில் இன்று நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே – நியூசிலாந்து அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 121 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நியூசிலாந்து 13.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே அரைசதம் (59 ரன்) எடுத்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.