மான்செஸ்டர்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
4வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் மான்செஸ்டரில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் வீரர்கள் இன்று வலைப்பயிற்சி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும் மான்செஸ்டரில் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருப்பதால் போட்டி திட்டமிட்டபடி தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம்.