India vs England: ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடரில் இங்கிலாந்து – இந்தியா மோதும் 4வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 23) தொடங்குகிறது. மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் தொடங்கிய இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
India vs England: 3 மாற்றங்கள்
நடப்பு தொடரில் இந்திய அணி கேப்டன் சுப்மான் கில் 4வது முறையாக டாஸை இழந்தார். இங்கிலாந்து அணியில் ஆஃப் ஸ்பின்னர் ஷோயப் பஷீர் காயம் காரணமாக தொடரை விட்டு விலகிய நிலையில், லியம் டாவ்சன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் மூன்று மாற்றங்களை செய்யப்பட்டது. கருண் நாயர், நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதில் சாய் சுதர்சன், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Here’s #TeamIndia’s Playing XI for the Fourth Tes
Anshul Kamboj makes his Debut
Updates https://t.co/L1EVgGu4SI#ENGvIND pic.twitter.com/bR2QO2eT8H
— BCCI (@BCCI) July 23, 2025
India vs England: சாய் சுதர்சனுக்கு 2வது வாய்ப்பு
இந்த போட்டியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என அஸ்வின் உள்ளிட்ட பல தரப்பில் கூறப்பட்ட நிலையில், அவருக்கு இந்த போட்டியிலும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. 6 இன்னிங்ஸிலும் பெரியளவில் ரன் அடிக்காத கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்சனுக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சாய் சுதர்சன் முதல் போட்டியில் பெரியளவில் சோபிக்காத நிலையில், அவரை அடுத்த இரண்டு போட்டிகளில் இருந்து தூக்கியது கம்பீர் – கில் ஜோடி. சாய் சுதர்சன் இந்த 2வது வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வாரா என்ற கேள்வி எழுகிறது.
India vs England: அன்ஷுல் கம்போஜ்
ஷர்துல் தாக்கூரும் முதல் போட்டிக்கு பின்னர் ஓரங்கட்டப்பட்டார். நிதிஷ்குமாரின் காயத்தை தொடர்ந்து அவருக்கு தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 5 நாள்களும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஷர்துல் தாக்கூருக்கு இந்த சூழலும் அதிகம் சாதகமாக இருக்கும். இவர் நம்பர் 8இல் இந்தியாவுக்கு நம்பிக்கை அளிப்பார். அன்ஷுல் கம்போஜை பொறுத்தவரை, அவரது Seam Movement இந்திய அணிக்கு சிறப்பாக உதவும். புதிய பந்தில் பும்ரா உடன் இவர் அட்டாக்கை தொடங்குவார் எனலாம்.
ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்திய அணி 9 போட்டிகளில் விளையாடி 4இல் தோல்வியடைந்தது, 5 போட்டிகள் டிராவாக்கி உள்ளது. இதனால் இந்திய அணி இங்கு முதல் வெற்றியை பெற போராடும்.
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், சுப்மான் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், அன்ஷுல் கம்போஜ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
இங்கிலாந்து: பென் டக்கெட், ஜாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ், ஜேமி ஸ்மித், லியம் டாவ்சன், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ்.
மேலும் படிக்க | IPL 2026: இந்த 4 வீரர்களுக்கு ஐபிஎல் மினி ஏலத்தில் ஜாக்பார்ட் தான்!
மேலும் படிக்க | இந்த 3 வீரர்கள் நீக்கப்படுவது உறுதி! ஏலத்தில் எடுக்கப்படுவதும் சந்தேகம் தான்!
மேலும் படிக்க | இந்திய அணிக்கு ஆப்பு உறுதி… டெஸ்டில் 5 நாள்களும் மழைக்கு வாய்ப்பு – இதுகளும் சதி பன்னுதே!