Pakistan Cricketers Who Had Extramarital Affairs: கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வு எப்போதுமே அவர்களது ரசிகர்கள் உற்றுநோக்கும் ஒரு விஷயமாகவே இருந்து வருகிறார். இந்த கிரிக்கெட் வீரர் யாரை காதலிக்கிறார், இந்த சினிமா நடிகை எந்த நடிகருடன் கிசுகிசுக்கப்படுகிறார், யார் யாருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருக்கிறார்கள் என இதுபோன்ற தகவல்களை தெரிந்துகொள்ளவும், ஒவ்வொரு அப்டேட்டை பார்க்கவும் ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர்.
Extramarital Affair Allegation: இமாத் வாசிம் மீது குற்றச்சாட்டு
அந்த வகையில், பாகிஸ்தானின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இமாத் வாசிம் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாகவும், இதைத் தொடர்ந்து அவர் தனது மனைவி பிரிய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இமாத் வாசிம் பாகிஸ்தான் சமூக வலைத்தள பிரபலம் நைலா ராஜா என்பவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக பல நாள்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த தகவல் பொய் என்றும் அடிப்படை ஆதரமற்றவை என்றும் நைலா ராஜா தெரிவித்து வந்தார்.
ஆனால் தற்போது இமாத் வாசிமின் மனைவி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில், “மௌனத்தை சம்மதமாகவோ அல்லது ஆதாரமின்மையாகவோ கருதக்கூடாது. கவனமாக யோசித்த பிறகு நான் சரியான நேரத்தைத் தேர்வு செய்வேன்” என பதிவிட்டிருக்கிறார். இது இமாத் வாசிம் மற்றும் அவரது மனைவிக்கு இடையே விரிசல் இருப்பதை காட்டுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இமாத் வாசிம் திருமணத்தை தாண்டிய உறவில் இருக்கிறாரா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவிலல்லை.
இந்நிலையில், இமாத் வாசிம்மை போன்று மற்ற 3 பாகிஸ்தான் வீரர்களும் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக முன்னர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த மூன்று பேர் யார் யார் என்பதை இங்கு காணலாம்.
Extramarital Affair: அப்துல் ரசாக்
முன்னாள் பாகிஸ்தான் ஆல்-ரவுண்டரான இவர் பலமுறை திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக அவரே ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கடந்த 2019ஆம் ஆண்டில் பகிர்ந்துகொண்டார். அதாவது 5-6 பேருடன் தான் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாகவும், அதில் ஒருவருடன் சுமார் ஒன்றரை வருடம் உறவில் இருந்ததாகவும் கூறினார். இவை அனைத்தும் திருமணத்திற்கு பிறகு உண்டான உறவுகள் என்றும் அவர் கூறினார்.
Extramarital Affair: ஷாயப் மாலிக்
முன்னாள் பாகிஸ்தான் கேப்டனான இவரின் திருமணம் இந்தியர்களால் அதிகம் கவனிக்கப்பட்ட ஒன்றாகும். இவர் சானியா மிர்ஸாவை 2010ஆம் ஆண்டில் மணந்தார். இவர்கள் இருவரும் 13 ஆண்டுகள் மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை நடத்தி வந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஷோயப் மாலிக் பாகிஸ்தானிய நடிகை சனா ஜாவேத் என்பவருடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. தொடர்ந்து, 2024ஆம் ஆண்டில் ஷோயப் மாலிக் – சானியா மிர்ஸா இடையே விவாகரத்து ஏற்பட்டது. தொடர்ந்து 2024ஆம் ஆண்டில் சனா ஜாவேத்தை, ஷோயப் மாலிக் 2வது திருமணம் செய்துகொண்டார்.
Extramarital Affair: இம்ரான் கான்
1992ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டனும், 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை பாகிஸ்தானின் 22வது பிரதமராக பொறுப்பு வகித்தவருமான இம்ரான் கானும் பல முறை திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தகவல்கள் உள்ளன. இவர் 1995ஆம் ஆண்டில் இருந்து 2004ஆம் ஆண்டு வரை ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவருடன் திருமண உறவில் இருந்தார். அதன்பின், 2014இல் ரெஹம் கான் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இம்ரானின் 2வது மனைவி எழுதிய புத்தகத்தில்தான் இவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். குறிப்பாக, இம்ரான் கான் பல முறை திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாகவும், அதுவும் பல பெண்களுடன் உறவில் இருந்து 5 பிள்ளைகளை இம்ரான் பெற்றதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். இம்ரான் 3வது திருமணம் செய்துகொண்டதும், அதுவும் பல சர்ச்சைகளை சந்தித்தது வேறு கதை. தற்போது அரசு ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி 2024ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | வெளியேறும் ரிஷப் பண்ட்… உள்ளே வரும் இன்னொரு அதிரடி வீரர் – வலுபெறும் இந்திய அணி!
மேலும் படிக்க | ரிஷப் பண்ட் விலகல்? – ஷாக்கில் இந்திய அணி… 10 பேர் படையால் வெற்றி கிடைக்குமா?
மேலும் படிக்க | இனி இந்த பிளேயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது! முடிவுரை எழுதிய கவுதம் கம்பீர்