மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த வருடம் (2026) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையே முதலில் டி20 தொடர் நடைபெற உள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஜூலை 1-ம் தேதி நடைபெற உள்ளது. டி20 தொடர் நிறைவடைந்தவுடன் ஒருநாள் தொடர் ஜூலை 14-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான அட்டவணை முழு விவரம்:
டி20 தொடர்:
முதல் டி20 போட்டி – ஜூலை 1-ம் தேதி – டர்ஹாம்
2-வது டி20 போட்டி – ஜூலை 4-ம் தேதி – மான்செஸ்டர்
3-வது டி20 போட்டி – ஜூலை 7-ம் தேதி – நாட்டிங்காம்
4-வது டி20 போட்டி – ஜூலை 9-ம் தேதி – பிரிஸ்டல்
5-வது டி20 போட்டி – ஜூலை 11-ம் தேதி – சவுத்தம்டான்
ஒருநாள் தொடர்:
முதல் ஒருநாள் போட்டி – ஜூலை 14-ம் தேதி – பர்மிங்காம்
2-வது ஒருநாள் போட்டி – ஜூலை 16-ம் தேதி – கார்டிப்
3-வது ஒருநாள் போட்டி – ஜூலை 19-ம் தேதி – லார்ட்ஸ்